யானைக்கும் ஹீரோவுக்குமான பாச பிணைப்பில் சற்று கமர்சியலையும் சேர்த்துள்ளார்கள். இதோ ராஜபீமா ரெடி
ஹீரோ ஆரவ் திடீரென நேரும் தன் அம்மாவின் மரணத்தால் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார். அந்த நேரத்தில் ஒரு யானை மீது அவருக்குப் பாசம் வருகிறது. அதன் காரணம் சிறுவயதில் தன் அம்மா யானைகள் பற்றிச் சொன்னவை தான். அதனால் மகனுக்கு அவர் ஆசைப்பட்ட யானையை வீட்டிற்கு கொண்டு வருகிறர் தந்தையான நாசர். ஒரு கட்டத்தில் ஆரவ்வின் ஆசை யானை கடத்தப்படுகிறது. அதன் பின் நடக்கும் ஆக்சன் மேளா தான் படத்தின் கதை
ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவிற்கான அனைத்து அம்சங்களோடும் இருக்கிறார் ஆரவ். நல்ல கதையம்சம் உள்ள ஆக்சன் கதைகளில் நடித்தால் ஆக்சன் நாயகனாக அவர் வலம் வரலாம். நாயகி ஆஷிமா நர்வால் சில காட்சிகளோடு தன் கடமையை முடித்துக்கொள்கிறார். யோகிபாபு நம்மைச் சிரிக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் தன் இருப்பை பதிவு செய்துள்ளார்
சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் இன்னும் ஆரோக்கியமாக வந்திருக்கலாம். பின்னணி இசை ஓகே ரகம். சதிஷ்குமாரின் ஒளிப்பதிவில் தனிப்பதிவு மிஸ்ஸிங் என்றாலும், சில இடங்களில் அவர் தான் படத்தைக் காப்பாற்றுகிறார்
ஒரு காலத்தில் யானை படங்களை எல்லாம் ஈசியாக எடுத்தார்கள். தற்போது அதற்கான கெடுபிடிகள் நிறைய. அதையும் மீறி கமர்சியலாக ஒரு யானை படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர். நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த ராஜபீமா, யானை நடை போன்ற பொறுமையோடு வெளியாகியிருப்பதால், பல அப்டேட் சீன்கள் மிஸ்ஸிங்.
இன்னும் திரைக்கதையின் அங்குசத்தை ஸ்ட்ராங்காக நிறுத்தியிருந்தால் இந்த ராஜபீமா ராஜபவனி செய்திருப்பார்
2.5/5
-வெண்பா தமிழ்