Tamil Movie Ads News and Videos Portal

ராபர்- விமர்சனம்

“திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகள் பழம்பெரும் பாடலாசிரியர் பட்டைக்கோட்டையார் எழுதியது. அந்த வரிகளில் திருந்த என்ற சொல்லிற்குப் பதிலாக, வருந்த என்ற சொல்லைச் சேர்த்தால் இன்றைய காலத்துக்குப் பொருந்தும். ஒரு மனிதனின் குற்றவுணர்ச்சியைப் போல அவனுக்கு வேறு தண்டனை இருக்க முடியாது. இப்படியான மனநிலையை லேசாக உருவாக்க முனைந்துள்ளது ராபர் படம்

வில்லேஜ் டூ சிட்டி பையனான ஹீரோ சத்யா ஜாலி வாழ்க்கைகாக திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். திருட்டில் முக்கியமான திருட்டான ஜெயின் பறிப்பை நிகழ்த்துகிறார். அவருக்கு வில்லன் டீமின் உதவி கிடைக்கிறது. இந்நிலையில் சத்யா நிகழ்த்தும் திருட்டுச் சம்பவம் ஒன்றில் ஒரு பெண் இறந்துவிடுகிறார். அதனால் ஹீரோ சந்திக்கும் இன்னல்களின் பின்னல்கள் தான் ராபர் படத்தின் கதை

நாயகன் சத்யா பிரமாதமாக நடித்துள்ளார். ஏற்கெனவே நல்ல நடிகர் என அவர் அறியப்பட்டிருந்தாலும் இதில் கூடுதல் பொறுப்போடு நடித்துள்ளார். இருவேறு முகங்கள் கொண்டு தன் கேரக்டரை வலுவான நடிப்பால் தாங்கியுள்ளார். இதர கேரக்டர்களில் வரும் டேனிபோப், ஜெயபிரகாஷ், தீபா சங்கர், சென்றாயன் ஆகியோரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்

பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே தனிக்கவனம் செலுத்தி அசத்தியுள்ளார் ஜோகன் சிவனேஷ். ஒளிப்பதிவு படத்தின் தேவையைச் சரியாக பூர்த்தி செய்துள்ளது. 1 மணிநேரம் 58 நிமிடத்திற்குள் படத்தைக் கச்சிதமாக கொண்டு வந்தது எடிட்டரின் திறனைக் காட்டுகிறது

சென்னையில் ஜெயின் பறிப்பு என்பது சங்கிலித் தொடர் போன்ற தொல்லை. அதை ஆழமாக பேசியுள்ள வகையில் இயக்குநர் எம்.எஸ் பாண்டி ஜெயித்திருக்கிறார். ஆச்சர்யப்பட வைக்கும் நிறைய டீடைல்ஸ் படத்தில் இருக்கிறது. சின்ன படம் என்பதை விட நல்ல படத்தை தயாரித்துள்ளார் பத்திரிகையாளர் கவிதா. ரைட்டிங்& மேக்கிங் இரண்டிலுமே இந்த ராபர் ஏமாற்றவில்லை என்பதால் படத்திற்குச் செல்லும் ரசிகன் நிச்சயம் ஏமாறமாட்டான்

ராபர்- சூப்பர்
3.25/5
-வெண்பா தமிழ்