சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்பது தான் முக்கியம். படம் என்ன சொல்ல வருகிறது என்பது இரண்டாம் பட்சம் தான். தொட்டு விடும் தூரம் படத்தைப் பொறுத்தவரை அவர்கள் சொல்லவந்த விசயம் ஆழமானது ஆனால் சொன்ன விதம் தான் சற்று சோகமானது. திரைமொழியில் இன்னும் வீரியம் இருந்திருக்கலாம். நடிகர்களின் பங்களிப்பில் இன்னும் சுவை இருந்திருக்கலாம். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் இன்னும் அழகு சேர்த்திருக்கலாம். சில இடங்களில் கத்திரியை தாராளமாகப் பயன்படுத்தி இருக்கலாம். இத்தனை லாம்கள்
இருக்கின்றன சொல்வதற்கு. ஆனாலும் இறுதியில் படம் உறுதியாகச் சொல்லும் மெசேஜ் மெய் சிலிர்க்க வைக்கிறது. காதலனைத் தேடும் ஒரு காதலியின் பயணம் தான் இப்படம். இப்படக்குழுவினர் இன்னும் சில அனுபவங்களைச் சேகரித்து அடுத்தப் பயணத்தில் இலக்கைத் தொட்டு விடுவார்கள் என்று நம்புவோம்.
அதை முன்னிட்டு, ஹீரோ விவேக்ராஜ், ஹீரோயின் மோனிகா சின்ன கோட்லா, தயாரிப்பாளர் P.ராம்குமார், இயக்குநர் V.P நாகேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துகளைச் சொல்லிடுவோம்