தண்ணீர் கேன் பிஸ்னெஸ் பின்னணியில் ஒரு கேங்க்ஸ்டர் சம்பவம்
ராதாரவி சரண்ராஜ் இருவரும் எதிரெதிர் துருவங்கள். இருவரின் பிஸ்னெஸும் தண்ணீர் கேன் சப்ளை தான். இவர்களில் ராதாரவியிடம் வந்து வேலைக்குச் சேர்கிறார் ஹீரோ துஷ்யந்த் ஜெயபிரகாஷ். அவருக்கு ஒரு காதலும் வருகிறது. இரு கேங்வார், ஹீரோவின் காதல் என படம் பயணிக்கிறது
துஷ்யந்த் ஜெயபிரகாஷ் தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக்கொள்ளும் வகையில் நன்றாக நடித்துள்ளார். கேப்ரில்லாவிற்கு பெரிதாக வேலையில்லை. ராதாரவி வழக்கம் போல தரமாக நடித்துள்ளார். சரண்ராஜ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி இருவரும் நடிப்பில் நல்ல பங்களிப்பைச் செய்துள்ளனர்
போபோ சசி இசை அமைத்துள்ளார். ரசிக்கத்தக்க பாடல்களைத் தந்துள்ளார். வெல்டன்! ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வட சென்னையின் நிலவியலை தன் கேமராவிற்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார்.
இயற்கை அனைவருக்கும் சமமாக வழங்கும் தண்ணீரை, மனிதர்கள் எப்படி பாகுபடுத்தி விற்பனைப் பொருளாக்குகிறார்கள் என்பதைச் சிறப்பாகப் பேசியுள்ளார் இயக்குநர் ஜெயவேல் முருகன். கேங்க்ஸ்டர் கதைக்கு உண்டான அம்சங்கள் படத்தில் இருந்தாலும், பல குறைகளும் படத்தில் உண்டு. திரைக்கதையில் அழுத்தமே இல்லை. அதனால் படம் டாப் கியரை அழுத்தவேயில்லை. ஆயினும் தண்ணீர் கொள்ளையின் பின்புலத்தைப் பேசியிருக்கிறார் இயக்குநர். அதற்காக பாராட்டலாம்
2.5/5
-வெண்பா தமிழ்