Tamil Movie Ads News and Videos Portal

போட்- விமர்சனம்

ஆழ்கடல் முத்தா? அத்தனையும் வெத்தா?

1943-ல் ஜப்பான் போர்விமானங்கள் குண்டு மழை பொழியவிருக்கிறது. ஹீரோ யோகிபாபுவின் தம்பியை பிரிட்டிஷார் பிடித்து வைத்துள்ளனர். தங்கைக்கு திருமணம் முடிக்க வேண்டிய நாளில் தம்பி தன்னுடன் இருக்க வேண்டும் என விரும்பும் யோகிபாபு பாட்டியோடு சேர்ந்து பிரிட்டிஷ் போலீஸிடம் கெஞ்சுகிறார். அங்கு அவமானப்படுத்தப் படுகிறார். பின் குண்டுகள் சூழ் உலகில் இருந்து தப்பிக்க யோகிபாபு ஒரு படகில் நடுக்கடலுக்குச் செல்ல முடிவெடுக்கிறார். அவரோடு எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷன் உள்பட இன்னும் சிலர் பயணிக்கிறார்கள்..அந்தப் பயணத்தின் முடிவு தான் படத்தின் கதை

யோகிபாபுவின் சில ஒன்லைனர்கள் எடுபட்டாலும் பல எடுபடவில்லை. கதையின் நாயகனுக்கான உள்ள காட்சிகளில் எல்லாம் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். எம்.எஸ் பாஸ்கர் கிடைக்கும் எல்லா கேப்களையும் Fill பண்ணி அசத்தியுள்ளார். சாம்ஸ், உள்பட ஏனைய காமெடியன்ஸ் ஓகே ரகம். கெளரி கிஷன் ஒரு ஹீரோயின் என்ட்ரி என்ற அளவில் மட்டுமே இருக்கிறார்

ஜிப்ரான் இசையில் ஒருபாடல் மட்டும் தேறுகிறது. பின்னணி இசை சுமார் தான். ஒளிப்பதிவாளர் வரைகலை ஷாட்கள் போக, ஏனைய ஷாட்களையும் சிறப்பாக கம்போசிங் செய்துள்ளார்.

உலக அரசியல், இந்தியாவிற்குள் இருக்கும் சாதிய அணுகுமுறைகள், பிரிட்டிஷ் காலத்திய சூழல்கள், தற்கால நிலையைக் குறித்து அப்பவே பேசப்பட்ட விசயங்கள் என பல குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தாலும் படம் பெரிதாக சுவாரஸ்யத்தை கொடுக்க வில்லை. காரணம் துடுப்பில்லாத திரைக்கதை எனலாம். நல்ல ஐடியாவைப் பிடித்த இயக்குநர் இன்னும் திரைக்கதையை பட்டை தீட்டியிருந்தால் ரசிகர்கள் இந்தப் போட்டில் நம்பி ஏறியிருப்பார்கள்.

2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்