வெள்ளிவிழா நாயகனுக்கு சொல்லிக் கொள்ளும் படி அமைந்திருக்கிறதா ஹரா?
மனைவி மகளுடன் வாழும் மோகன் ஒரு வாழ்வில் ஒரு சோகம் நிகழ்கிறது. அந்தச் சோகம் படம் பார்க்கும் ரசிகனையும் பற்றியிருந்தால் படம் மீது நம் கவனம் ஒன்றியிருக்கும். But மிஸ் ஆயிடிச்சு
கதையின் நாயகனாக மோகன் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். அனுமோல் நடிப்பும் நல்ல விதமாக அமைந்துள்ளது. பத்திரிகையாளர் ஆபிரகாம் கோடங்கியின் மகன் முதல்படம் என்ற சுவடு தெரியாத வகையில் நன்றாக நடித்துள்ளார் அவருக்கு நல் வாழ்த்துகள். ஏனைய கேரக்டர்கள் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம்
படத்தின் ஆகப்பெரும் பிரச்சனை மேக்கிங் தான். மிகக்குறைந்த பட்ஜெட் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா? படத்தின் இசை பாடல்கள் ஒளிப்பதிவு எல்லாம் ஹராவிற்கு பெரும் சோதனையாகத் தான் அமைந்துள்ளது.
மத நல்லிணக்கம் முதல் எல்லா அறங்களையும் ஒரே படத்தில் மோகனை வைத்துச் சொல்லிவிட வேண்டும் என இயக்குநர் மெனக்கெட்டுள்ளார். ஆனால் அதை தேர்ந்த திரைமொழியாக்கத் தவறிவிட்டார்
2.25/5
-மு.ஜெகன் கவிராஜ்