Tamil Movie Ads News and Videos Portal

வெப்பன்- விமர்சனம்

ஆயுதத்தை டைட்டிலாக கொண்டவர்கள் கதை எனும் ஆயுதத்தை ஸ்ட்ராங்காக அமைத்துள்ளனரா?

ஹீரோ வசந்த் ரவி சூப்பர் ஹுயூமனை அறிமுகப்படுத்தும் ஒரு யூட்யூபர். ஒரு வெடி விபத்தில் அவர் ஒரு கூட்டத்திடம் சிக்குகிறார். பின் தனக்கு ஒரு சூப்பர் ஹுயூமன் தெரியும் என சொல்கிறார். அவர் சூப்பர் ஹுயூமனை எப்படி அப்ரோச் செய்து முடிவில் எதை அச்சீவ் செய்கிறார் என்பதே படத்தின் கதை

சுமாரான கதை என்றாலும் சூப்பராக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் வசந்த் ரவி. ஓரளவு தேர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். சத்தியராஜ் சிறப்பாக நடித்துள்ளார். இவர்கள் இருவர் கேரக்டர்களை தவிர்த்து வேறு எந்தக் கதாப்பாத்திரமும் சரியாக எழுதப்படவில்லை. இன்னும் மேம்பட்ட ரைட்டிங் இருந்திருக்கலாம்

ஜிப்ரானின் இசை படத்தை உயிர்ப்போடு வைத்துள்ளது. பிரபு ராகவ் தன் கேமராவால் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். எடிட்டர் நான் லீனியர் எடிட்டிங் முறையை இன்னும் தெளிவாகச் செய்திருக்கலாம்.

இயக்குநர் குகன் சென்னியப்பன் சொல்ல வந்த விசயத்தை கன்னா பின்னாவென இழுத்துச் சொல்லியிருக்கிறார். ஆகையால் படம் இரண்டாம் பாதியில் படுத்தே விட்டது. சூப்பர் ஹுயூமனை கண்டு பிடித்தவர்கள் இந்த வெப்பனை வைத்து சூப்பர் கதையை கண்டு பிடித்திருக்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்